திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற நபயொருவரை காட்டு யானை  தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (11.06.2021) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் வான்எல,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கே.குலதூங்க  என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மகனுடன் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் சென்ற போதே மறைந்திருந்து காட்டு யானை தாக்கியதில்  தந்தை ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாகவும்,யானைத் தாக்குதலுக்குள்ளான மகன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.