சமூக வலைத்தள செய்திக்காக கைதுசெய்யப்பட்டோருக்கு உதவத் தயார் - பாலித ரங்கே பண்டார

Published By: Gayathri

11 Jun, 2021 | 11:46 AM
image

(நா.தனுஜா)

சமூகவலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்தமைக்காக எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அதற்கென பிரத்யேகமாக இரு சட்டத்தரணிகளை நியமித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை காணொளியொன்றை வெளியிட்டு அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் விதமான நடவடிக்கைகளைத் தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்யும் நபர்களை, பொய்யான செய்திகளைப் பகிர்ந்ததாகக்கூறி கைது செய்வதற்கும் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்குக் கொண்டுசென்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்றவாறான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. இது சட்டத்திற்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும்.

பொதுமக்களுக்கான கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது அரசியலமைப்பில் அடிப்படை உரிமை என்றவாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் நோக்கில் அந்த அரசியலமைப்பிற்கும் அப்பாற்பட்ட செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபடுகின்றது.

எனவே சமூகவலைத்தளங்களில் தமது கருத்துக்களை வெளியிட்டமைக்காக எவரேனும் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்களானால் அவர்கள் சார்பில் செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருக்கின்றது. 

அவ்வாறு கைது செய்யப்படக்கூடியவர்களுக்கு இலவச சட்ட உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்கென யசஸ்.டி.சில்வா, நவீன் சானக ஆகிய இரண்டு சட்டத்தரணிகளை நியமித்திருக்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சி எப்போதும் மனித உரிமைகளையும் தகவல் அறியும் உரிமையையும் கருத்துச்சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05