கொரோனா தொற்றின் 3 ஆவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இது வரை 10,842 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.ஆர்.எம்.தௌபீக் இன்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் அதிக அளாவிலான தொற்றாளார்களாக 166 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 52 நோய்த்தொற்றாளார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அம்பாறை சுகாதார அதிகாரி பிரிவில் 03 பேரும, கல்முனையில் 17 தொற்றாளார்களும் அடங்கலாக 238 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.
கடந்த 7 நாட்களில் 1228 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகவே இந்த வாரம் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்
மேலும் கிழக்கில் இதுவரை 200 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் கனிசமான அளவு 46 மரணங்களும் இவ்வாரத்தில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM