வவுனியாவில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவதற்காக இராணுவத்தினரால் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட உட்பட நாட்டின் பல பாகங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 10 மற்றும் 11 திகதிகளில் ஒய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. 

இந்நிலையில் ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டைகளை பயணக்கட்டுப்பாட்டில் அனுமதி பத்திரமாக உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய  கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, வன்னி இராணுவ கட்டளைத் தளபதியின் ஏற்பாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து தற்போதுள்ள கொரோனா இடர் நிலையினை கருத்திற்கொண்டு  முதியோருக்கு  ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும்  வவுனியாவிலுள்ள வங்கிகளுக்கு இன்றையதினம் காலை இ.போ.ச பேரூந்துகள், இராணுவ வாகனங்களில்  ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது, சீரான முகக்கவசம் அணியாதவர்களுக்கு இராணுவத்தினரினால் முகக்கவசங்கள் வழங்கி  வைக்கப்பட்டதுடன் இயலாமையினால் கஸ்டப்பட்ட முதியவர்களை கையைப்பிடித்து இராணுவத்தினர் அழைத்தும் சென்றனர்.