ஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்

Published By: Vishnu

10 Jun, 2021 | 01:34 PM
image

ஜி 7 மாநாடு நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் வெடிகுண்டு அச்சுறுத்தல் வெளியான பின்னர் சுமார் 100 விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜி 7 உச்சிமாடு ஆரம்பமாவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் கார்விஸ் விரிகுடாவிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள ஃபால்மவுத் என்ற ஹோட்டலுக்கு வெளியே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் பொதியொன்றிலிருந்து சந்கேத்திற்கிடமான  பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஹோட்டலில் தான் ஜி 7 மாநாட்டிற்காக ஜூன் 11 வெள்ளிக்கிழமை முதல் உலகத் தலைவர்கள் சந்திப்பினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

அதன் பின்னர் ஹோட்டலிலிருந்து ஊழியர்களும், விருந்தினர்களும் வெளியேற்றப்பட்டதுடன், கார்பிஸ் விரிகுடாவின் உச்சி மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி 11,000 பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளனர்.

அது மாத்திரமன்றி இது தொடர்பான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தொடங்கும் ஜி 7 உச்சி மாநாடு உலகின் மிக சக்திவாய்ந்த ஜனநாயக தலைவர்களை ஒன்றிணைக்கும்.

மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும்.

குழுவின் மற்ற உறுப்பினர்களில் கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் தடுப்பூசி போடுவதை ஆதரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை தோற்கடிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்க போரிஸ் ஜோன்சன் இந்த மாநாட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47