தியத்தலாவை வைத்தியசாலைக்கு பி.சி.ஆர். இயந்திரம் கையளிப்பு

Published By: Digital Desk 2

10 Jun, 2021 | 12:18 PM
image

இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தினால் இலங்கைக்கு 65 இலட்சம்  ரூபாய் பெறுமதியான  பி.சி.ஆர்.  இயந்திரம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜய பெட்டினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த இயந்திரம் அலரி மாளிகையில்  வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். இயந்திரம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கை தொழிலாளர்  காங்கிரஸின் உப தலைவரும்,பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முயற்சியின் ஊடாக இந்த பி.சி.ஆர். இயந்திரம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, தியத்தலாவை வைத்தியசாலைக்கு இந்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்புக்காக தனியார்துறை வழங்கும் பங்களிப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது  நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம அலுவலகத்தின்  பிரதானி யோஷித்த ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44