சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் 'மாநாடு' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மாநாடு'. இதில் நடிகர் சிலம்பரசன் அப்துல் காலிக் மற்றும் வளையாபதி என்ற இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள். 

இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், தம்பி ராமையா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் ரமழான்  திருவிழா அன்று வெளியிடப்படும் என அறிவித்தனர். 

அந்தத் தருணத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு குடும்பத்தில் துக்க நிகழ்வு நடைபெற்றதால் சிங்கிள் ட்ராக் வெளியீடு திகதியை மாற்றி அமைத்தனர். அந்த வகையில் தற்போது முதல் பாடலை ஜூன் 21 ஆம் திகதியன்று வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

யுவன் - சிலம்பரசன் கூட்டணி பல வெற்றிப் பாடல்களை வழங்கி இருப்பதால், இந்த சிங்கிள் ட்ராக்கிற்கு இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.