போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றவர்கள் போன்றவர்களுக்கு இந்த அரசாங்கத்தினுடாக நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவினரின் வழிகாட்டல் நடமாடும் சேவையானது இன்றைய தினம் யாழ்.நல்லூர் ஆலய பகுதியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.