அனைத்து சமையல் எரிவாஞ உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்கள் நாடு முழுவதும் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகார சபையினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 

எந்தவொரு வியாபாரியும் இலங்கையினுள் விற்பனை நோக்கத்திற்கான சமையல் எரிவாயு உள்ளடங்கிய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர்களை விற்பனை செய்ய மறுத்து உடைமையில், பாதுகாப்பில் மற்றும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.

அத்தகைய சிலிண்டர் வகையினை கொள்வனவு செய்யாது விடுமாறு பாவனையார்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வற்புறுத்த முடியாதெனவும் கூறப்பட்டுள்ளது.

இப் பணிப்புரை 2021.06.09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.