ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை 

Published By: Digital Desk 4

09 Jun, 2021 | 08:02 PM
image

(எம்.மனோசித்ரா)

ஓய்வுபெற்றுள்ள தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கனார்.

தாதிய சேவையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றிணைந்த அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர் , மேல் மாகாணத்தின் பிரதம சங்கநாயக்க முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோரது கோரிக்கைக்கு அமைய இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் சுகாதார அமைச்சருக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் 34 000 தாதிகள் பணிபுரிகின்றனர். அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குவதே இந்த சந்திப்பின் நோக்கமாகக் காணப்பட்டது.

இதன் போது தாதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை அதிகரிப்பது தொடர்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கருத்து தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு நிபுணத்துவம் பெற்ற தாதியர்களை பணியில் அமர்த்துவதற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

பயிற்சிக்காக சேவையில் இணைக்கப்பட்டுள்ள தாதியர்களில் எண்ணிக்கை 2000 ஆக குறைவடைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதன் போது சுட்டிக்காட்டினார்.

தற்போது மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் பணிபுரியும் தாதியர்களின் பயிற்சி காலத்தையும் சேவை காலத்துடன் இணைக்குமாறு இதன் போது பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இது தவிர தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான பயிற்சியை குறுகிய காலத்திற்கு மாற்றுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முணசிங்க, ' தற்போது 840 தாதியர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவுகளில் சேவையாற்றுவது தொடர்பான குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் 1000 பேருக்கு துரித பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்றுள்ள தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தாதியர்களின் சேவை காலத்தை நீடிப்பது குறித்த தற்போதைய நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

கொவிட் கட்டுப்படுத்தலில் சுகாதாரத்துறையின் சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றமையை நினைவுகூர்ந்த பிரதமர் , அவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.

சுகாதாரத்துறையினர் சகலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதோடு , அவர்களின் குடும்பத்தாருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பிரதமரிடம் தெரிவித்தார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள காலப்பகுதிகளில் தாதியர்களுக்கான முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இதன் போது பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பட்டப்படிப்பை நிறைவு செய்த தாதிகளுக்கு பட்டத்தினை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

தாதிகளுக்காக பட்டத்தினை வழங்குவதற்கான சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் , குறித்த சட்டமூலத்தை துரிதமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது அதிகரிக்கப்பட்ட தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு அதன் பின்னர் இதுவரையில் அதிகரிக்கப்படவில்லை என்பதை இதன் போது சுட்டிக்காட்டிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் , அந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் பொதுவான தீர்மானமொன்றை எடுத்து அடுத்த வரவு-செலவு திட்டத்தினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என்று பிரதமர் இதன் போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38