'கொழும்பு மஹத்­தயா' எனும் பெயரால் அறி­யப்­படும் பாதாள உலகக் குழுத் தலை­வனின் அடி­யாட்கள் 5 பேர் கார் ஒன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது களுத்­துறை வடக்கு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஹெரோயின் போதைப் பொருள், கைக்­குண்டு மற்றும் சில ஆயு­தங்­க­ளுடன் இவர்கள் இவ்­வாறு காலி வீதி­யூ­டாக களுத்­துறை திசையில் இருந்து கொழும்பு நோக்கி காலி வீதி­யூ­டாக பய­ணித்­துக்­கொன்­டி­ருந்த போதே நேற்று முன் தினம் இரவு வேளையில் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சந்­தேக நபர்கள் காரை சோத­னைக்கு நிறுத்­திய பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரை மோதி­விட்டு தப்பிச் செல்­லவும் முயற்­சித்­துள்­ள­துடன் களுத்­துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஆனந்த சில்­வா­வுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டை­யி­லேயே வாடி­ய­மங்­கட சந்­தியில் வீதித் தடையை ஏற்­ப­டுத்தி சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து கைக்­குண்­டொன்றும், ரீ 56 ரக துப்­பாக்கி ரவை­கள் 15 உம், மெகஸின் இரண்டும், வாள்கள் இரண்டும் ஹெரோயின் போதைப் பொருள் 5.21 கிராமும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

களுத்­துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு கிடைத்த தக­வலை அடுத்து சந்­தேக நபர்கள் பய­ணித்த காரை சோதனை செய்ய பொலிஸார் நிறுத்­து­மாறு சமிக்ஞை செய்­துள்­ளனர். களுத்­துறை வடக்கு பொலிஸ் நிலையம் முன்­பாக வைத்தே இந்த சமிக்ஞை செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும் அந்த சமிக்­ஞையை கணக்கில் எடுக்­காத சந்­தேக நபர்கள் தாம் பய­ணித்த காரை கொழும்பு நோக்கி வேக­மாக செலுத்­தி­யுள்­ளனர்.

இந் நிலையில் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் மோட்டார் சைக்­கிளில் அந்த காரை பின் தொடர்ந்து சென்­றுள்ளார். ஒரு கட்­டத்தில் அந்த பொலிஸ் கான்ஸ்­ட­பிளை காரால் மோதி வீழ்த்­தி­விட்டு தப்பிச் செல்­லவும் சந்­தேக நபர்கள் முயற்­சித்­துள்­ளனர்.

எனினும் மேலும் மூன்று கான்ஸ்­ட­பிள்கள் இணைந்து வாடியமங்கட சந்­தியில் வீதித்தடை­யொன்றை திடீ­ரென ஏற்­ப­டுத்தி வேக­மாக வந்த காரின் வேகத்தை குறைத்­துள்­ளனர். இதன்போது காரை பின் தொடர்ந்து வந்த கான்ஸ்­டபிள் காரின் திறப்பை திடீ­ரென கழற்றி எடுத்­துள்ளார். இத­னை­யடு­த்து உடன் செயற்­பட்ட ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­களும் சந்­தேக நப­ர்களை கைது செய்து காரை சோதனை செய்­த­போதே ஆயு­தங்­களும் ஹெரோ­யினும் சிக்­கி­யுள்­ளன.

கைதான சந்­தேக நபர்கள் பாண­துறை, மொற­ட்டுவை மற்றும் பண்­டா­ர­கம பகுதி­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். இவர்கள் குற்றச் செயல் ஒன்றில் ஈடு­ப­டவே இவ்வாறு குழுவாக சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்மல் கொடித்துவக்குவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.