(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இலங்கை கடல் பரப்பில் நுழையவில்லை. மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடித்திருக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையில் இறக்கவேண்டிய 513 கொள்கலன்கள் இருந்ததாகவும் அவர் சபையில் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்கு அரசாங்கமே காரணம் என்ற ரீதியில் எதிர்கட்சியினர் கருத்துக்களை கூறி வருகின்றனர். எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலானது சட்டவிரோதமாக, அல்லது இரகசியமாக கொண்டுவரப்பட கப்பல் அல்ல. ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கு ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கும் செல்லும் கப்பலாகும். சிங்கப்பூரில் ஆரம்பித்து ஆறு நாடுகளுக்கு பயணிக்கும் கப்பலாகும். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இந்த கப்பல் இலங்கைக்கு வந்தது.மே 17 ஆம் திகதி வரவேண்டிய கப்பல் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களுக்கு பின்னர் வந்தது. இதில் 1,466 கொள்கலன்கள் இருந்தன. அதில் 513 கொள்கலன்கள் இலங்கைக்கில் இறக்க வேண்டியவை. ஆகவே இது ஒரு இரகசிய கப்பல் என எவரும் கூற முடியாது.
திடீரென கப்பலில் கோளாறு ஏற்பட்டது. ஆனால் அது குறித்த எந்தவித அறிவிப்பையும் இலங்கை துறைமுகத்திற்கு அறிவிக்கவில்லை. 20 ஆம் திகதி அதிகாலையில் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து நங்கூரமிடப்பட்டு பத்து மணித்தியாலங்களுக்கு பின்னரே கப்பலில் கசிவு ஏற்பட்டதை அறிவித்துள்ளனர். பின்னர் நண்பகல் 12 மணிக்கு கப்பலில் புகை தன்மையொன்று ஏற்படுவதையும் அறிவித்தனர். பின்னர் அதனை அனைத்தாக தகவல் வழங்கியுள்ளனர். இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னரே மீண்டும் கப்பல் தீப்பிடிப்பதாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்னரே ஏனைய சம்பவங்கள் நடந்து முடிந்தன. உண்மையில் மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடிதிருக்க வேண்டும். தீ பரவல் கப்பலில் இருந்த இரசாயன பதார்த்தங்களில் பரவி கப்பல் வெடிப்பிற்கு உள்ளானது. கப்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போக காலநிலையும் பிரதான காரணமாகும். ஆகவே இதில் எந்தவித சூழ்ச்சியும் ஏற்படவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM