உத்தரப் பிரதேசில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் பலி ; பலர் காயம்

By Vishnu

09 Jun, 2021 | 10:39 AM
image

உத்தரப் பிரதேச மாநிலம் சச்செண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் உயரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சச்செண்டி, கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் பஸ்ஸொன்று டெம்போ லொறியொன்றின் மீது மோதி கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக குறித்த பகுதிக்கான பொலிஸ் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், இறந்தவரின் உறவினர்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விபத்துக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரம் உடனடி உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25