கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தை விடுவிக்குமாறு அழுத்தம்

Published By: Vishnu

09 Jun, 2021 | 10:02 AM
image

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய அழுத்தம் கொடுத்துள்ளது.

குடும்பத்தில் மூன்று வயதான சிறுமியொருவரின் உடல் நிலை பாதிப்பினால், மருத்துவ ரீதியாக பிரதான நிலப்பகுதிக்கு வெளியேற்ற வேண்டியதிருந்த நிலையில் இந்த அழுத்தம் எழுந்துள்ளது.

காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் ஒவ்வாமையினால் உடல்நிலை பாதிப்படைந்த தர்னிகா முருகப்பன் என்ற சிறுமி தற்சமயம் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் செப்சிஸ் மற்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலையான நிலையில் இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் போதிய மருத்துவ வசதி பெறுவதில் தாமதம் இருப்பதாக அவர்கள் விமர்சித்தனர்.

கிறிஸ்மஸ் தீவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் செல்வதற்கு முன்பு தர்னிகா சுமார் 10 நாட்கள் உடல்நிலை பாதிப்படைந்திருந்தார். பின்னர் அவர் பெர்த்திற்கு மாற்றப்பட்டார்.

அவரது தாயார், பிரியா நடேசலிங்க்ட்ராம், பலமுறை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது மருத்துவமனை சிகிச்சையை கேட்டதாகக் கூறினார், ஆனால் மருத்துவர்கள் அவளுக்கு பரசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் மாத்திரைகளை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவுஸ்திரேலிய எல்லைப் படை அதன் பராமரிப்பில் தனிநபர்கள் செயலற்றதாக அல்லது தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் கடுமையாக மறுத்துள்ளனர்.

இந் நிலையில் மூன்று வயது சிறுமியின் உடல் நிலை தொடர்பான நிலை தற்போது புகலிடம் மற்றும் குடும்பத்திற்கான பொது அக்கறை அவர்களின் வழக்கை மறுபரிசீலனை செய்துள்ளது.

சிறுமியின் பெற்றோர், இலங்கையிலிருந்து தமிழ் அகதிகளாக தஞ்சம் கோரி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றுள்ளனர்.

அவர்கள் குயின்ஸ்லாந்து நாட்டின் நகரமான பிலோலாவில் குடியேறினர், அங்கு அவர்கள் தர்னிகா மற்றும் கோபிகா ஆகிய இரு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தனர்.

2018 ஆம் ஆண்டில், குடும்பத்தின் புகலிட கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர்கள் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பின்னர் குடும்பம் 2019 இல் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

தர்னிகாவின் தாய் பிரியா அவருடன் பெர்த் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது தந்தை நடேஸ் மற்றும் மூத்த சகோதரி கோபிகா ஆகியோர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் உடல் நிலை பல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் அவர்களை விடுவிப்பதற்கான அழைப்புகளை புதுப்பிக்க தூண்டியுள்ளது.

குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசா வழங்க உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸுக்கு அதிகாரம் உள்ளது.

இந் நிலையில் செவ்வாயன்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்காவிலோ அல்லது நியூசிலாந்திலோ குடும்பத்தை மீளக்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தங்களை பரிசீலிப்பதாக அறிவித்தது.

அவுஸ்திரேலியா ஒரு கடுமையான அகதிக் கொள்கையைக் கொண்டுள்ளது. அங்கு படகில் வரும் புகலிடம் கோருவோரை அழைத்துச் செல்ல மறுக்கிறது. 

மக்கள் கடத்தல் நடைமுறையை நிறுத்துவதே பிரதான நோக்கு என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால் இந்த நடவடிக்கை தன்னிச்சை மற்றும் அகதிகள் உரிமைகளை மீறும் செயற்பாடு என்று மனித உரிமைகள் அமைப்பு விமர்சித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50