2022 ஆம் கல்வி ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பும் இறுதித் திகதி இம் மாதம் 30 ஆம் திகதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கொவிட் மற்றும் சீரற்ற கால அனர்த்த நிலையைக் கருத்திற்கொண்டு கால எல்லை நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதமடைந்திருப்பின் அதுபற்றி பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.