ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இந்திய நாட்டுப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை கட்டுநாயக்க போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இவரை கைதுசெய்துள்ளனர்.  

இதன்போது, 838 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் சந்தேக நபரிடமிருந்து  கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.