நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற அக்ஸயன் என்ற வயது 17 மாணவன் 8 ஆம் திகதி மாலை கல்முனைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

நாடு பயணக்கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.