மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம்  ஸ்ரீ நாகம்மாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (06) மத வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த  குறித்த கோயிவிலின் தலைவர் உட்பட  12 நபர்கள் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை நேற்று (07)  மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு குறித்த 12 நபர்களையும் பதிநான்கு நாட்கள் தனிமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்துமாறு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறி ஒன்று கூடுவோருக்கு  எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.