ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரணிலுடன் எவரும் இணையப் போவதில்லை - ஹெக்டர் அப்புஹாமி

Published By: Digital Desk 4

08 Jun, 2021 | 09:13 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படபோவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக இதுபோன்ற கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திற்கு “அதானி” என பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கைகளையே  அரசாங்கம் முன்னெடுத்துள்ளது - ஹெக்டர் அப்புஹாமி | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுவார். எமது கட்சியில் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது.

நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றிலிருந்து மக்களின் அவதானத்தை திசைதிருப்புவதற்காக இவ்வாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது ராஜபக்ஷர்களின் சூழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் நாம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றோம்.

எமது கட்சித்தலைவர் நாட்டில் தற்போதைய நிலைமை , கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் தொடர்பில் சிறந்த விளக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை எமது கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பொறுப்புகளை பொறுப்பேற்கும் அளவுக்கு தகைமைகளை கொண்டுள்ளனர்.

இன்னுமொருவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை. பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இவ்வாறான இரகசிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் எமது கட்சியினர் அதற்கு சிக்கமாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான புதிய பணிப்பாளர்...

2024-10-10 01:30:14
news-image

தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப...

2024-10-09 16:55:06
news-image

ஞானசாரதேரரை கைதுசெய்வதற்கு பிடியாணையை பிறப்பித்தது நீதிமன்றம்

2024-10-09 21:51:52
news-image

வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2024-10-09 21:36:29
news-image

மனித உரிமை பேரவை தீர்மானம் -...

2024-10-09 21:24:15
news-image

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித...

2024-10-09 19:59:34
news-image

ஜனாதிபதி - ஜேர்மன் தூதுவர் சந்திப்பு;...

2024-10-09 18:46:30
news-image

கண்டி விகாரமகாதேவி பெண்கள் கல்லூரியின் மாணவிகள்...

2024-10-09 18:33:15
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் தென் கொரிய தூதுவர்;...

2024-10-09 18:28:22
news-image

ஜனாதிபதி - தாய்லாந்து தூதுவர் இடையே...

2024-10-09 18:25:05
news-image

கெப் வாகனம் மோதி ஒருவர் பலி...

2024-10-09 18:51:48
news-image

கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று...

2024-10-09 18:21:43