எம்முடைய உடலில் செலீனியம் என்ற வேதிப் பொருளின் அளவு இயல்பை விட குறைந்துக் கொண்டே வந்தால் கல்லீரல் புற்று நோய் உண்டாகும் என்று அண்மையில் ஓர் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.
எம்முடைய நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் சாப்பிடும் உணவின் மூலமே பெறுகிறோம். இந்த ஊட்டச்சத்துகள் மைக்ரோ ஊட்டசத்து என்றும், மேக்ரோ ஊட்டச்சத்து என்று மருத்துவ விஞ்ஞானிகள் வகைப்படுத்துவர். தண்ணீர், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை எல்லாம் மேக்ரோ ஊட்டச்சத்து என்றும், விற்றமின் மற்றும் தாது சத்துக்களை மைக்ரோ ஊட்டச்சத்துகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதில் செலீனியம் என்பது மைக்ரோ ஊட்டச்சத்துள்ள தாதுப்பொருள் அல்லது கனிமப் பொருள். இவை எம்முடைய உடலில் தேவையான அளவிற்கு இருக்கவேண்டும். இவை இருந்தால் தான் புரதத்துடன் செலீனோபுரோட்டீன் என்ற பெயரில் உடலில் பயணிக்கும். இவை தான் புற்று நோய் செல்கள் மரபணுக் செல்களை தாக்காமல் பாதுகாத்து வருகிறது. அத்துடன் இவ்வகையான மரபணுக்களையும் சேதமில்லாமல் தற்காத்து வரும் பணியையும் செய்து வருகிறது. அதே சமயத்தில் எம்முடைய உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டிற்கும் இந்த செலீனியம் பேருதவி புரிகிறது. இதன் காரணமாக கல்லீரலில் ஏற்படும் புற்று நோய் செல்களை மேலும் வளரவிடாமல் தடுத்து அழிக்கவும் உதவுகிறது.
இந்நிலையில் ஏதோ சில காரணங்களால் எம்முடைய உடலில் இருக்கும் செலீனியத்தின் அளவு குறையத் தொடங்கினால் புற்று நோயின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அத்துடன் நாள்பட்ட நோயையும் இது உருவாக்கிவிடும்.
அதிகமாக உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறையை தெரிவு செய்து வரும் வளர்ந்து வரும் நாடுகளில் இதன்தாக்கம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளாமை, அல்லது உணவு கட்டுப்பாடின்மை, மது அருந்துதல், புகை பிடித்தல், விற்றமின் டி அளவு குறைவாக இருத்தல் டைப் - 2 சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் ஏற்படும் நோய் ஆகியவற்றின் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு இத்தகைய கல்லீரல் புற்று நோய் வரக்கூடும்.
இதைத்தடுக்கவேண்டும் என்றால் எம்முடைய உணவு வகைகளில் செலீனியம் அதிகமாக உள்ள உணவுப் பொருளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
மட்டி மற்றும் சால்மன் வகை மீன்கள், ஆட்டிறைச்சி, முட்டை, காளான், சிறு தானியங்கள், மற்றும் வெங்காயம் ஆகியவற்றில் இந்த செலீனியம் செறிவாக இருக்கிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் உடலில் செலீனியத்தின் அளவை இயல்பாக வைத்துக் கொண்டு, புற்று நோய் பாதிப்பு ஏற்படா வண்ணம் தற்காத்து கொள்ள இயலும்.
டொக்டர் P.ராஜ்குமார் M.S., DNB.,
தொகுப்பு அனுஷா
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM