கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு கெரோனா தொற்று ஏற்றுப்பட்டுள்ளமை நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தாய்க்கு அண்டிஜன் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தபோதும் அவருக்கு இருக்கும் அறிகுறிகள் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதனால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேதேவளை நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் ஏழு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM