ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவு

By J.G.Stephan

08 Jun, 2021 | 11:15 AM
image

மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துலா சாஹிட், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

அப்துலா சாஹிட் 2021 - 2022 ஆண்டுக்கான காலப்பகுதிக்கு இவ்வாறு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமையன்றே 76 ஆவது ஐ.நா பொதுசபையின் தலைவராக அப்துல்லா ஷாஹித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வாக்கெடுப்பின் பிரகாரம் மேற்படி தேர்வு இடம்பெற்ற நிலையில், 191 வாக்குகளில் அப்துல்லா ஷாஹித் 143 வாக்குகளையும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சல்மாய் ரசோல் 48 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மாலைதீவை சேர்ந்த ஒருவர், இப்பதவிக்கு தெரிவாகியிருப்பது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right