பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள உயர்வை பெற்றுக் கொடுப்­ப­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் முன்­வ­ர­வேண்டும். இல்­லையேல் தொழிற்­சங்கப் போராட்­டத்­துக்கு செல்ல நேரி­டு­மென இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார்.

முத­லா­ளிமார் சம்­மே­ளனம் முன்­வைத்­துள்ள 500 ரூபா அடிப்­படை சம்­ப­ளத்தை எந்­த­வ­கை­யிலும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. எனவே அதனை அவர்கள் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எட்­டா­வது தட­வை­யா­கவும் எவ்­வித இணக்­கப்­பா­டு­மின்றி நிறை­வ­டைந்த கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்த்தை குறித்து கருத்து கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளது சம்­பள உயர்வை நிர்­ண­யிக்கும் கூட்டு ஒப்­பந்தம் இரண்டு வரு­டங்­க­ளுக்­கொரு முறை முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் செய்­து­கொள்­ளப்­படும் ஒன்­றாகும்.

அத­ன­டிப்­ப­டையில் 2013 ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட கூட்டு ஒப்­பந்­த­மா­னது கடந்த வருடம் மார்ச் 31 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்­தது; இருந்த போது அடுத்த இரு­வ­ரு­டங்­க­ளுக்­கான புதிய கூட்டு ஒப்­பந்தம் இது­வ­ரை­யிலும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலை­யி­லேயே புதிய கூட்டு ஒப்­பந்­தத்­துக்­கான எட்­டா­வது கட்ட பேச்­சு­வார்த்தை கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது. இப்­பேச்­சு­வார்த்­தையில் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­களின் சார்பில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்கம் மற்றும் தொழிற்­சங்க கூட்­ட­மைப்பு ஆகி­யன கலந்­து­கொண்­டன.

இந்த பேச்­சு­வார்த்­தையின் போது பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு நாள் ஒன்­றுக்­கான அடிப்­படை சம்­ப­ள­மாக 500 ரூபா வழங்­க­வ­தற்­கான யோச­னையை முத­லா­ளிமார் சம்­மே­ளனம் முன்­வைத்­தது. சங்க பிர­தி­நி­திகள் முற்­றாக நிரா­க­ரித்­தனர். இதனால் எட்டாம் கட்ட பேச்­சு­வார்த்­தையும் எவ்­வித இணக்­கப்­பா­டு­மின்றி நிறை­வ­டைந்­தது.

பெருந்­தோட்டத் தொழி­லாளர் ஒருவர் தற்­போது அடிப்­படை சம்­ப­ள­மாக 450 ரூபா பெறு­கிறார். பல்­வேறு கொடுப்­ப­ன­வுகள் அடங்­க­ளாக நாள் ஒன்­றுக்கு 620 ரூபா கொடுக்­கப்­ப­டு­கி­றது. எனவே முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் பரிந்­து­ரையின் படி நாள் ஒன்­றுக்­கான அடிப்­படை சம்­பளம் 50 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­படும் இந்த அதி­க­ரிப்­புக்கு புறம்­பாக நாள் ஒன்­றுக்கு பறிக்­கப்­படும் 11 கிலோ­வுக்கும் அதி­க­மான ஒவ்­வொரு கிலோ கொழுத்­திற்கும் ஒரு தொகை வழங்­கவும் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் யோச­னையை முன்­வைத்­தது. ஆனால் இவற்றை தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் முற்­றாக மறுத்­தனர்.

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­பளம் குறைந்த பட்சம் 62 ரூபா­வுக்கு அதி­க­மாக இருக்க வேண்டும். ஏனைய தொகை கொடுப்­ப­ன­வு­க­ளாக இருந்தால் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டிலேயே தொழிற்சங்கங்கள் இருந்தன.

உலக சந்தையின் தேயிலை மற்றும் இறப்பர் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி வீழ்ச்சி போன்ற காரணிகளை காரணம் காட்டி தொழிற்சங்க பிரதிநிதிகளின் சம்பள உயர்வு கோரிக்கையினை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்தது.