எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் தற்சமயம் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காரணத்தினால் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களை நியமிக்கப்பட்ட வங்கிகளுக்கு குறித்த தினத்தில் கொண்டு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்களில் உதவியுடன் இந்த போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அதன்படி, ஓய்வூதியம் செலுத்தும் வங்கிகளும் அன்றைய தினம் திறந்திருக்கும்.