வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்திற்கு எதிராக ஊடக அமைப்புகள் போர்க்கொடி

Published By: Digital Desk 4

07 Jun, 2021 | 09:46 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர் என்று வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு, ஊடகவியலாளர் சமூகத்திடமும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரிடமும் அவர் மன்னிப்புக்கோரவேண்டும் என பல்வேறு ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

Articles Tagged Under: வைத்தியர் ஹேமந்த ஹேரத் | Virakesari.lk

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர்.

எனவே அத்தகைய அடிமட்ட ஊடகவியலாளராக இருக்கவேண்டாம் என்று சுகாதார அமைச்சின் ஊடாகப்பேச்சாளர் வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் வெளியிட்ட கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது இந்தக் கருத்தைக் கண்டித்து ஊடகசேவை தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடக அமையம், தமிழ் ஊடக அமையம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகிய ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் 'தேர்ட் கிளாஸ்' ஊடகவியலாளர்கள் என்றவாறு நீங்கள் வெளிப்படுத்திய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினால், தமது உயிரைத் தியாகம் செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்ட ஊடகவியலாளர்களை நீங்கள் அவமதித்திருக்கிறீர்கள்.

வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி வழங்கப்படாத நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்பட்டமையே இன்னமும் அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்படாமைக்குக் காரணம் என்று நாங்கள் நம்புகின்றோம்.

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நீங்கள், அதில் பேசப்பட்ட விடயங்களுடன் சம்பந்தப்படாத விடயம் குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரை இலக்குவைத்தே கோபத்துடன் இத்தகைய கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது.

எதுஎவ்வாறெனினும், சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் என்ற பதவியை வகிக்கும் நீங்கள், அநீதிகளால் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்குச் செய்த பாரிய அவமதிப்பை சாதாரணமாகக் கருதிவிடமுடியாது.

அநீதிகளுக்கு இலக்கான ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் ஊடக சமூகமும், அந்த ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரும் உங்களுடைய கருத்தினால் கடுமையான மனவேதனைக்குள்ளாக நேர்ந்திருக்கிறது.

உங்களுடைய கருத்து தொடர்பில் விவாதமொன்றுக்குச் செல்வதை நாம் விரும்பவில்லை. எனினும் உங்களுடைய கருத்தினால் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கும் ஊடகசமூகத்திடமும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக்கோருவது பொறுப்புவாய்ந்த அதிகாரி என்ற அடிப்படையில் நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்று நாங்கள் நம்புகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51