தனியார் வங்கிகளின் அனைத்துக் கிளைகளும் சில தினங்களுக்கு முழுமையாக மூடப்படும்..!

Published By: J.G.Stephan

07 Jun, 2021 | 04:54 PM
image

(நா.தனுஜா)
நாட்டில் அமுலிலுள்ள அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் வர்த்தக வங்கிகளின் அனைத்துக் கிளைகளும் சில தினங்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளன. எனினும் அவ்வாறு மூடப்படும் தினங்களிலும் இணையவழியிலான 'ஒன்லைன்' வங்கிச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பத் வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 'விசேட கிளைகள்' உள்ளடங்கலாக சம்பத் வங்கியின் அனைத்துக்கிளைகளும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும். எனினும் வாடிக்கையாளர்கள் அவசர தேவைகளின் போது இணையவழியில் எமது வங்கிச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை தற்போது விதிக்கப்பட்டுள்ள  அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகளின் காரணமாக 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியிலுள்ள கொஷர்ஷல் வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. அதேவேளை அதன் இணையவங்கிச்  சேவையின் ஊடாகப் பாதுகாப்பான கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் 7 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தமது வங்கிக்கிளைகள்  அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருக்கும் என்.டி.பி வங்கி, ஏதேனும் அவசர தேவைகளின் போது அந்தந்தப் பிரதேச வங்கிக்கிளைகளின் முகாமையாளர்களைத் தொடர்புகொள்ளமுடியும் என்றும் அறிவித்துள்ளது.

வங்கிக்கிளைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் அட்டன் நெஷனல் வங்கி, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக இன்றைய தினமும் (திங்கட்கிழமை) நாளைய தினமும் (செவ்வாய்கிழமை) தமது கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. 






முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38