சதீஷ் கிருஷ்ணபிள்ளை

அதனை உலகின் சிறந்த நாடு என்பார்கள். எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேளுங்கள். பலகாரணங்களைப் பட்டியலிடுவார்கள். சகலபட்டியல்களிலும் ‘கலாச்சாரம்’இருக்கும்.   பல்லினங்களையும், பல்வகை கலாச்சாரங்களையும் வரித்துக் கொண்ட தேசம். 

இங்கு பன்முகக் கலாச்சாரம் என்பது தேசிய கொள்கை. சிறுபான்மையினரை அங்கீகரிப்பதில் அதனை விட சிறந்தது எதுவும் இல்லை. கல்வியிலும்,தொழிலிலும் சிறுபான்மையினருக்கு கூடுதல் வாய்ப்பு என்ற ரீதியில் இன்னோரன்ன சிறப்புக்கள்.   

இது வந்தேறு குடிகளின் தேசம் என்பதால், வந்தாரை வரவேற்கும். அன்புடன் அரவணைத்துப் பாதுகாக்கும். சகிப்புத்தன்மை காட்டும். இங்கு பூர்வீகக் குடிகளுக்குத் தான் பிரச்சினை. இவர்கள் இழந்தது ஏராளம்.

இழப்பிற்கு கணக்கு வழக்கு கிடையாது. நியாயங்களும் இல்லை.    இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தீவிரம், மகோன்னதமானதாக சித்தரிக்கப்படும் தேசத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. 

அந்தத் தேசம் தான் கனடா. இங்கு கடந்த வாரம் இனங்காணப்பட்ட புதைகுழி தற்போது தீவிர பேசு பொருளாக மாறியுள்ளது.   பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலம். அங்கொரு வரலாற்று கால பள்ளிக்கூடம். பிள்ளைகள் தங்கியிருந்து படித்தது. 

பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், லேசர் கதிர்களை நிலத்திற்குள் செலுத்தி ஆராய்கிறார்கள். புதை குழியின் அறிகுறிகள் தெரிகின்றன.   ஒன்றல்ல, இரண்டல்ல 215 பிள்ளைகளின் உடல் எச்சங்கள்.

அவற்றில் மூன்று வயதுடைய குழந்தையுடையதாக நம்பப்படும் உடல் எச்சங்களும் உண்டு. பழங்குடிச்சமூகம் ஆத்திரம் கொள்கிறது. இது எங்கள் குழந்தைகள் தான் என்கிறது. இது போல எத்தனையோ பெரும் புதைகுழிகள் இருக்கலாம். தேடிக் கண்டுபிடியுங்கள் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-06#page-18

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.