எக்ஸ்பிரஸ் பேர்ளுக்கு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கியது யார்?  

By Digital Desk 2

07 Jun, 2021 | 08:41 PM
image

கொரோனாவின் மூன்றாவது அலைக்கு எதிராக போராடுவதில் தற்போதைய அரசாங்கம் தடம் புரண்டு கொண்டிருக்கையில் பிறிதொரு‘தலையிடி’ ஏற்பட்டிருக்கின்றது. இந்தத் ‘தலையிடி’ ஏற்பட்டது என்பதை விடவும் அரசாங்கம்தனாகாகச் சென்று தேடிக்கொண்டது என்று தான் கூற வேண்டியுள்ளது.    

"எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பல்" இது சீன உற்பத்தியில் உருவாக்கப்பட்டு சிங்கப்பூருக்குச் சொந்தமானதாக உள்ளது. இந்தக் கப்பல் இந்தியாவின் குஜராத் ஹசீரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டபோது கொள்கலனிலிருந்து கசிவும் ஆரம்பித்தது.

இந்த நிலையில் குஜராத் மற்றும் கட்டார் துறைமுகங்களில் இக்கப்பல் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரப்பட்ட போதும் அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பு துறைமுகத்திற்கு கப்பலின் நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.    

எனினும், துறைமுகத்தின் தீர்மானிக்கவல்ல அதிகாரியான ‘ஹார்பர் மாஸ்டர்’ எனப்படும் துறைமுக மா அதிபர் முதலில்அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

இருந்தபோதிலும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர்அனுமதி வழங்கும் விடயத்தினை நேரடியாக கையாண்டுள்ளார்.    ‘ஹார்பர் மாஸ்டர்’என்பவரே துறைமுகத்துக்குள் எந்தவொரு கப்பலும் பிரவேசிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் சுதந்திரமடைவதற்கு முன்னதாக, கிழக்கிந்திய கம்பனி காலத்தில்‘ஹார்பர் மாஸ்டர்’ என்பவர் முக்கியமானவர்.    அவருடைய கையிலேயே கப்பற்போக்குவரத்திற்கான அதிகாரம் காணப்படும். அவரே கப்பல்கள் பிரவேசிப்பதற்கான, வெளிச்செல்வதற்கான தீர்மானங்களை எடுப்பவராக உள்ளார். 

இந்த நடைமுறை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது.   அப்படியிருக்க,‘ஹார்பர் மாஸ்டரின்;’ அதிகார வரையறைகளை கடந்து சென்ற அந்த ‘முக்கிஸ்தர்’ கொழும்புத்துறைமுகத்திற்கு நேரடியாகவே விஜயம் செய்து அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றார்.

அவர் இவ்வளவு துணிகரமாக செயற்படுவதற்கு ‘உயர்மட்ட ஆசீர்வாதம் தான் காரணம்’ என்று துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த கப்பலைஅனுமதிப்பதன் ஊடாக இந்தளவு தூரம் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்றும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியபொருட்கள் இருக்கும் என்றும் அந்த ‘முக்கியஸ்தர்’ அல்லது, அந்த முக்கியஸ்தருக்கு ‘ஆசீர்வாதம்’அளித்தவர் என்று எவருமே எண்ணியிருக்கவில்லை.    

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான ‘தலையிடிக்கு’ குறித்த முக்கிஸ்தரின் மேதாவித்தனமான செயற்பாடே காரணம் என்று கருதுகின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதனால் அந்த முக்கியஸ்தரை அழைத்து கடுமையான ‘டோஸ்’ வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தரப்பு தகவல்கள் கூறுகின்றன. 

 ஆனால், குறித்த முக்கிஸ்தர் ஜனாதிபதியிடம் ‘டோஸ்’ வாங்கினாலும் தனக்கு ஆசீர்வாதம் வழங்கியவரை குறிப்பிட்டு தப்பித்துக்கொள்ள முயலவில்லையாம். மாறாக தலைகுனிந்தபடியே இருந்திருக்கின்றாராம். இதனால் ‘ஆசீர்வாதம்’அளித்தவரிடத்தில், முக்கியஸ்தருக்கான நன்மதிப்பு அதிகரித்திருக்கின்றதாம் என்றும் அரசாங்கத்தரப்பின் ‘ஊடு’ தகவல்கள் கூறகின்றன. 

இவ்வாறிருக்கையில் சர்வதேச கடற்பரப்பில் கப்பற்போக்குவரத்தில் நெருக்கடியாகவுள்ள பாதையின் கேந்திர அமைவிடத்தினைக் கொண்டிருக்கும் இலங்கை கப்பல் அனர்த்தங்களை கையாள்வதற்கான போதிய வசதிகளை கைவசம் கொண்டிருக்கவில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. 

அதேநேரம், அயல் நாடான இந்தியா, டுபாயிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கான அணுகு முறைகள் உடன் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் அரச உயர்மட்ட ஆய்வறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-06#page-15

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right