எம்.எஸ்.தீன்

 சமூகத்தின் தலைவர்களுக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன. அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் நேர் மற்றும் எதிர்மறை நடவடிக்கைகள் அவர் சார்ந்த சமூகத்தின் மீதும் தாக்குதலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் மதம், சமூகம், அரசியல் தலைவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் நடவடிக்கைகளினால் முஸ்லிம்கள் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  தலைவர்கள் எனப்படுவோர் கொள்கையும், துணிச்சலும், நேர்மையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய உயரிய பண்புகளை முஸ்லிம் தலைவர்களிடம் காண்பது அரிதாகவே இருக்கின்றன.

  

அதிலும், அரசியல் தலைவர்கள் தான் மிகவும் மோசமான நடத்தைக் கோலங்களை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  அரசியல் தலைவர்கள் என்போர் சமூகத்திடமிருந்து அதிகாரங்களைப் பெறுகின்றார்கள். சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுவோம் என்று உறுதி அளிக்கின்றார்கள். ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் அத்தகைய நல்ல நடத்தையை அவதானிக்க முடிவதில்லை.  

முஸ்லிம்களை பேரினவாத அரசுகளும், இனவாதிகளும் ஏமாற்றியதை விடவும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அவர்களின் வழியில் இருக்கும் சீடர்களுமே அதிகம் ஏமாற்றியுள்ளார்கள். இதற்கு பல சான்றுகளை முன்வைக்க முடியும்.  

குறிப்பாக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் ஆளுந்தரப்பு அரசியலில் மாத்திரமே விருப்பங்கொண்டவர்கள். இவர்களின் இந்த விருப்பத்தின் பின்னணியில் சமூக சிந்தனை இருப்பதில்லை.சுயதேவைகளை பூர்த்தி செய்வதாகவே இருந்து வருகின்றது. ஏமாறக் கூடியதொரு சமூகம் உள்ளவரை ஏமாற்றத் தெரிந்தவர்கள் இலாபமடைந்து கொண்டே இருப்பார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-06#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.