முதலீடு என்ற பெயரில் கொழும்பிலுள்ள கட்டடங்களை விற்க அரசாங்கம் முயற்சி - ஹர்ஷடி சில்வா

Published By: P. Saranya

07 Jun, 2021 | 04:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் கொழும்பில் இருக்கும் கட்டிடங்களை விற்பனைசெய்து பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அரச சொத்துக்களை விற்பனைசெய்வதன் மூலம்  பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் சில கட்டிடங்களை முதலீடுசெய்வது என்ற பெயரில் அரசாங்கம் விற்பனை செய்ய எடுத்துவரும் முயற்சி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதில்லை. மாறாக முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் கொழும்பில் இருக்கும் வெளிவிவகார அமைச்சு கட்டிடத்தை பங்குச்சந்தைக்கு விற்பனை செய்யவது அல்லது தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதாகவே அது தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாருக்கு விற்பனை செய்தாலும் இடம்பெறுவது விற்பனையாகும். 49வீதம் விற்பனை செய்வதாகவே அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. கொழும்பு 1இல் அமைந்திருக்கும் வெளிவிவகார அமைச்சு இருக்கும் கட்டிடத்தையே விற்கப்போகின்றனர்.

இதனை விற்கப்போவதில்லை என முடியுமானால் தெரிவிக்கட்டும். குறித்த கட்டிடத்தை முதலீட்டு இலாவாக பெயரிட்டு, அதற்கு தபால் தலைமையக கட்டிடம், யோர்க் கட்டிடம் மற்றும் கபூர் கட்டிடம் என்பவற்றையும் இணைத்துக்கொண்டு, அதற்கு எஸ்.பி.வி. என கம்பனி ஒன்றையும் அமைத்து, அதற்கு ஏதாவது பெயர் ஒன்றையும் பிரயோகித்து, அந்த கட்டிடத்தையே விற்கப்போகின்றனர்.

அத்துடன் இந்த கட்டிடங்களை யாருக்கு விற்கப்போகின்றனர் என எங்களுக்கு தெரியாது. தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்கள் எந்த நாடுகளில் இருந்து வருகின்றார்கள் என அவர்களுக்குத்தான் தெரியும். சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்த முறைக்கமையவே இந்த விடயமும் இடம்பெறுவதாக அரசாங்கத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை இதனுடன் ஒப்பிட முடியாது. சிங்கப்பூர் அரசாங்கம் செயற்படுவதுபோல் எமது அரசாங்கம் செயற்படுவதில்லை. அங்கு திருடர்கள், தரகர்கள் இல்லை. மிகவும் வெளிப்படையாகவே அவர்கள் செய்கின்றார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறு அல்ல, இந்த வேலைத்திட்டத்துக்குள் யாராவது மோசடி காரர் புகுந்து, அதில் வரும் வருமானத்தை தங்களுக்கு பெற்றுக்கொள்ளவே முயற்சிப்பார்கள்.

எனவே நாட்டு பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளும் பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றன. எந்த பக்கத்தால் இந்த பிரச்சினையில் இருந்து வெளிவருவது என தெரியாது. அதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே கொழும்பில் இருக்கும் இந்த பழைமை வாய்ந்த கட்டிடங்களை விற்பனைசெய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. என்றாலும் அரச கட்டிடங்களை விற்பதன் மூலம் ஒருபோதும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21