கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் பிரச்சினை: அவசரமாக தரை இறங்கிய விமானம்..!

Published By: J.G.Stephan

07 Jun, 2021 | 12:36 PM
image

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் உத்தியோகப்பூர்வ பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நண்பகல் ஆண்ட்ரூஸ் விமானப்படை  தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். இதன்போது, அவர் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்ய விமானி முயற்சி செய்தபோதும்,  அதற்கு பலன் கிடைக்கவில்லை.

 எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பி, அங்கேயே தரை இறக்கப்பட்டது. பின்னர் வேறு விமானத்தில் கமலா ஹாரிஸ், தனது பயணத்தை தொடர்ந்ததாக இந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றதன் பின்னரான உத்தியோகப்பூர்வ பயணமாக அவர் செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59