(எம்.சி.நஜிமுதீன்)

தெற்கில் இராணுவ முகாம் உள்ளதெனில்  வடக்கிலும் அவசியமெனக்கருதும் படைமுகாம்கள்  இருப்பதில் தவறில்லை. எனவே சில அரசியல்வாதிகள் குறிப்பிடுவதுபோல் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாதென தென்மாகாண  ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம்  நாட்டிலுள்ள  பல பிரச்சினைகளுக்கு  தீர்வுகளை முன்வைத்து வருகிறது.  வடக்குஇ கிழக்கில் அரசாங்கம்  கையகப்படுத்திய  காணிகள் விடுவிக்கப்பட்டு  மக்ளின் விவசாய நடவடிக்கைகளுக்கு  வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இராணுவ முகாம்களின் அவசியத் தேவைகளுக்கான காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் வடக்கிலுள்ள அரசியல்வாதி ஒருவர், வடக்கில்  இராணுவ முகாம் தேவையில்லை. அதனால் உனடடியாக அவற்றை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிடுவதுபோல்  செய்ய முடியாது என்றார்.