மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனாவால்  ஐவர் உயிரிழப்பு ; 95 பேருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

07 Jun, 2021 | 06:35 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (6) ஒரோநாளில் கொரோனா தொற்றில் இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 41 அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்று 95 பேருக்கு உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். 

கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து ஏறாவூரைச்சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரு பெண்களும், வாழைச்சேனையை சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரும், மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  ஒருவரும், பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், வெல்லவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் உட்பட  95 பேருக்கு தொற்று  இன்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 16:25:42
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22