ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வம் இன்று இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

No description available.No description available.No description available.No description available.No description available.No description available.

No description available.

இதன் போது காணி தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர் தொடர்ந்து தலைவர் திருச்செல்வம் கருத்து தெரிவிக்கையில், 

தற்போது பாடசாலை அமைந்துள்ள காணி பொருத்தமான காணி இல்லை இது மண்சரிவு அபாய நிலையில் உள்ள காணியாகும் இப்பிரச்சினை தொடர்பாக பல வருடங்களாக உள்ளது எனவும் தெரிவித்தார்

இப் பாடசாலை காணி தொடர்பாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய காணி ஒன்றை பெற்றுக் கொடுத்து மிக விரைவில் இதற்கான வேலை திட்டங்களை பாடசாலை அதிபர் ,பெற்றார், பழைய மாணவர்களை இணைத்துக் கொண்டு தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்

அத்தோடு இன்று  இரத்தினபுரி நகரத்தில் வெள்ளபெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைவர் திருச்செல்வம் இரத்தினபுரி மாவட்ட இளைஞர் அணி தலைவரும் விளையாட்டு துறை பொறுப்பாளருமாகிய பாபு கண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க  ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வம் நேரில் சென்று தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் 

No description available.No description available.No description available.