Sanken Group இனால் முன்னெடுக்கப்படும் 50 அடுக்குமாடி கலப்பு வதிவிட அபிவிருத்தித் திட்டமான Capitol TwinPeaks, 2021 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான இலக்குடன் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

எவ்வாறாயினும், Capitol TwinPeaks நிர்மாணப் பணிகள் தந்திரோபாயமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

முதலாவது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலைமைக்கு முன்னர் அபிவிருத்தியின் பாரிய நிர்மாண மைல்கல்லை எய்தியிருந்ததுடன், தற்போது அமுலிலுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தட்டுப்பாடுகள் காரணமாக நிர்மாணத் துறை பெருமளவான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், இந்தத் திட்டத்தின் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. 

Sanken இன் பணிகளில் தாக்கம் செலுத்தும் ஜப்பானின் Mitsui குழுமத்தின் தந்திரோபாயத் திட்டமிடலினூடாக, TwinPeaks திட்டம் எவ்வித தடங்கல்களுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் ஆரம்பத்துக்கு முன்னதாகவே, Sanken குரூப்பினால் அவசியமான மூலப் பொருட்கள் முன்பதிவு/கொள் முதல் செய்யப்பட்டிருந்தமையினால், தற்போது அதன் அனுகூலங்களை அனுபவிக்கின்றது.

Capitol Towers இன் (கெப்பிட்டல் டிவலபர்ஸ் துணை நிறுவனம்) முகாமைத்துவ பணிப்பாளர் ரோஹண வண்ணிகம கருத்துத் தெரிவிக்கையில், “உயர் தரம் வாய்ந்த நிர்மாணத்தை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கையளிப்பது என்பதுடன் Sanken நாமம் ஒன்றித்துள்ளது. தந்திரோபாயமான முன்னோக்கிய சிந்தனை மற்றும் அவசியமான திட்டமிடலினூடாக, இந்தத் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.” என்றார்.

40,000 சதுர அடிப் பரப்பளவுக்கு மேலாக இடவசதியைக் கொண்ட இந்தத் திட்டம், சர்வதேச கட்டடக்கலை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதனூடாக நிர்மாணிக்கப்படும் தயாரிப்பாக அமைந்துள்ளது.