நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக இரத்த தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய இரத்த மத்திய நிலையம் கடந்த மாத இறுதி பகுதியில் இரத்தத்தைப் பெறுவதற்கு எமது உதவியைக் கோரியது.
அதன்படி, எமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் நிறுவியுள்ள மின்னியலாளர்கள் அமைப்புகளின் உதவியுடன், தற்போதைய இரத்த பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த இரத்ததான முகாம்களை விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை பொது பயன்பாடுகளை ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகளை ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையினூடாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது;
10 நாட்களுக்குள், முதல் ஐந்து முகாம்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வங்கிகளின் தேவைகளைப் பொறுத்து அந்த முகாம்களுக்கு கிட்டத்தட்ட 500 பைன்ட் இரத்தத்தை தானம் செய்ய முடிந்தது. மேலும், 2,500 பைன்ட் இரத்தத்தை வெகுவிரைவில் இரத்த வங்கிக்கு தானம் செய்வதே எங்கள் குறிக்கோள்.
இந்த மாதத்தில் இரத்தினபுரி, கண்டி, பொலன்னறுவ, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேலும் 7 சிறப்பு இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளோம். தேவைக்கேற்ப இரத்த விநியோக முகாம்களை அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழுவின் இந்த இரத்ததான முகாம்களில் மக்கள் இரத்த தானம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மற்றும் பங்களிப்பு செய்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு, மாவட்ட மின்னியலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து, இரத்த தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண மாவட்ட அளவில் 12 இரத்த தான முகாம்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில் ஐந்து முகாம்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன, மீதமுள்ள முகாம்களை இந்த மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசரமாக இரத்தம் தேவைப்படும் குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில், முதல் ஐந்து இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 800 க்கும் மேற்பட்ட இரத்த தானம் செய்தவர்கள் (கொடையாளர்கள்) பதிவு செய்யப்பட்டனர்.
இந்த ஐந்து முகாம்களிலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இரத்த நிலையங்களுக்குத் தேவையான கிட்டத்தட்ட 500 பைன்ட் ரத்தத்தை தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மின்னியலாளர்கள் அமைப்புகள் மற்றும் பிற பொது அமைப்புகளுடன் இணைந்து, இரத்த தானம் செய்பவர்களை பதிவு செய்து, பயணிக்க நேரத்தையும் அனுமதியையும் அளிக்கிறது. இவை இணையம் மூலம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM