கார்வண்ணன்
“விக்னேஸ்வரன் பெரும் நம்பிக்கைகளுடன் வடக்கு முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டபோதும் அவரது நிர்வாகத் திறன் குறைவால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்தனர். அதுபோலத் தான், கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக உருவாக்கப்பட்ட மிகை நம்பிக்கையும் தற்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது”
தற்போதைய அரசாங்கத்தின் மீது முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் கூறிவரும் நிலையில் பேராயர் மல்கம் ரஞ்சித்தும் அவர்களுடன் இணைந்து கொண்டிருக்கிறார்.
நாட்டை பாதுகாக்கப் போவதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் வெளியிட்டுள்ள கருத்து பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கிறது.
நாடு எதனை நோக்கிப் பயணிக்கிறது,யார் ஆட்சி செய்வது, யாரால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்ற குழப்பம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போன்றவர்கள் தான், இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள். பேராயர் மல்கம் ரஞ்சித் கூட ராஜபக்ஷவினரின் விசுவாசி என்றே அறியப்பட்டவர்.
அவர்கள் தான் இப்போதைய அரசாங்கத்தை அதன் தீர்மானங்களை எதிர்க்கிறார்கள். அவர்கள் இதனை உரிமையோடு செய்வதில் நியாயம் உள்ளது.
தங்களதும், மக்களினதும் எதிர்பார்ப்பு வீணாகி விட்டது என்று, கோபமும் ஏமாற்றமும் ஒருங்கே அவர்களின் கருத்துக்களில் தெறிக்கின்றன.
தமிழ், முஸ்லிம்கள் தவிர, இந்த ஆட்சி மாற்றத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சி நம்பிக்கையை கொடுக்கவில்லை.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற போது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-06#page-13
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM