சத்ரியன்

“தடுப்பூசியை வைத்து அரசியல் நலன் தேடுகின்ற முயற்சிகளும் இடம்பெறுகின்றன. அரசியல்வாதிகள் பலரும் இதனை தங்களுக்கான பிரசாரமாக மாற்றிக் கொள்ள முற்படுகிறார்கள்”

 “ஒரு பொருளின் சந்தை விலையை தீர்மானிப்பது தனியே விற்பனையாளன் மாத்தரமல்ல, கொள்வனவாளரும் கூட. சினோபார்ம் தடுப்பூசி விடயத்தில் இலங்கை அரசு கொள்வனவாளராக இருந்த போதும் பேரம் பேசவில்லை”

கொரோனாவின் மூன்றாவது அலை விடயத்தில் அரசாங்கம் எவ்வாறு அலட்சியமாகவும் நிபுணர்களின் கருத்துக்களை புறக்கணித்தும் நடந்து கொண்டதோ, அதுபோலவே, தடுப்பூசிகள் விவகாரத்திலும் அரசாங்கம் மெத்தனப் போக்கில் செயற்படத் தொடங்கியிருக்கிறது.புத்தாண்டு காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தால், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேருக்குப் பரவிய புத்தாண்டுக் கொத்தணியை, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும் என்பதே சுகாதார நிபுணர்களின் பொதுவான கருத்து.

வெள்ளம் வந்த பின்னர் தான் அரசாங்கம் அணை கட்ட முயன்றது. இரண்டு வாரங்களைக் கடந்து பயணத் தடை நீடிக்கப்பட்டும்,இன்று வரை அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை.மூன்றாவது அலைக்கு முழுமையாக அரசாங்கத்தின் பொறுப்பீனம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுவாக சுமத்தப்படுகிறது.

இதனை எதிர்க்கட்சிகளோ, அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்திருப்பவர்களோ மாத்திரம் கூறவில்லை.அரசாங்கத்துடன் இருப்பவர்களும், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியவர்களும் கூட, இந்தக் குற்றச்சாட்டையே முன்வைக்கிறார்கள்.

மூன்றாவது  அலையைத் தடுக்கும் பொறுப்பை சரியாக நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தையும் சரியாக கற்றுக் கொள்ளவில்லை என்பதையே தடுப்பூசி விவகாரத்தில் நடக்கின்ற குளறுபடிகளும், வெளிப்படையற்ற தன்மையும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-06#page-11

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.