வடக்­கிலும் கிழக்­கிலும் சட்­ட­வி­ரோத சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் தமிழ் மக்­களை அழிக்­க­வேண்டும் என்ற எண்ணம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. தமிழ் மக்கள் வாழும் எந்­த­வொரு பகு­தி­யிலும் அத்­து­மீ­றிய சிங்­கள குடி­யேற்­றங்கள் எவையும் நடை­பெ­றாது.

முன்­னைய அர­சாங்­கத்தை போலவே எம்­மையும் கரு­தாது அனை­வரும் எம்­முடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என அமைச்­ச­ரவை ஊட­கப்­பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். காணா­மல்­போ­னோரை கண்­ட­றியும் விட­யத்தில் அர­சாங்கம் சரி­யான பொறி­மு­றை­களை கையாள்­வ­தா­க­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு,கிழக்கு பகு­தி­களின் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களில் தாம் தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும், இந்த நிலைமை தொட­ரு­மாயின் மீண்டும் சர்­வ­தேச தரப்­பிடம் முறை­யி­ட­வேண்டி வெறும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்ள நிலையில் இந்த கருத்து தொடர்பில் அர­சாங்­கத்தின் பதிலை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

யுத்­தத்தின் பின்னர் வடக்கில் பொது­மக்­களின் காணி­களை இரா­ணுவம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டை நாம் ஒரு­போதும் மறுக்­க­வில்லை. முன்­னைய அர­சாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்­களை தமது சொந்த நிலங்­க­லைபோல் பாவித்­தனர். அதேபோல் அனா­வ­சிய இரா­ணுவ முகாம்­களை அமைத்தும் அதி­யுயர் பாது­காப்பு வல­யங்­களை உரு­வாக்­கியும் தமது ஆதிக்­கத்தை தக்­க­வைத்­தி­ருந்­தனர். எனினும் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது அர­சாங்­கத்தின் முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக வடக்­கிலும் ,கிழக்­கிலும் அனா­வ­சிய இரா­ணுவ முகாம்கள் அனைத்­தையும் நீக்கி பொது­மக்­களின் காணி­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­துள்ளோம்.

எனினும் வடக்­கிலும், கிழக்­கிலும் சட்­ட­வி­ரோத சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் தமிழ் மக்­களை அழிக்­க­வேண்டும் என்ற எண்ணம் எம்­மிடம் இல்லை. நாம் ஜனா­நா­யக ரீதியில் இந்த நாட்டில் அனைத்து மக்­க­ளுக்கும் தேவி­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்த நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் மூவின மக்­களும் வாழ உரிமை உள்­ளது. அதேபோல் வடக்கில் சிங்­கள குடி­யேற்­றங்கள் ஆரம்­பத்தில் இருந்தே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. யுத்த கால­கட்­டத்தில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தினால் வெளி­யேற்­றப்­பட்ட சிங்கள் மக்­களின் நிலங்­களை அவர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுப்­பதும் அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

எமது அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை சரி­யாக நிறை­வேற்றும். நாம் வடக்கில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றோம். இப்­போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகு­தி­களின் மக்­களை குடி­ய­மர்த்தும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்­டுதான் வரு­கின்­றது. தமிழ் மக்கள் வாழும் எந்­த­வொரு பகு­தி­யிலும் தமிழ் மக்­களின் உரிய நிலங்­களில் அத்­து­மீ­றிய சிங்கள் குடி­யேற்­றங்கள் எவையும் நடை­பெ­றாது. இந்த விட­யத்தில் யாரும் எம்­முடன் முரண்­பட்டு சர்­வ­தேச தரப்பை நாட­வேண்­டிய தேவை இல்லை. முன்­னைய அர­சாங்­கத்தை போலவே எம்­மையும் கருதி செயற்­ப­டாது எம்­முடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட அனை­வரும் தயா­ராக வேண்டும்.

மேலும் காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ர­ணை­களை அர­சாங்கம் எமது பொறி­மு­றைக்கு அமைய மேற்­கொண்டு வரு­கின்­றது. கடந்த காலத்தில் காணா­மல்­போ­னோரை கண்­ட­றியும் ஆணைக்கு மேற்­கொண்ட விசா­ர­ணை­களை தொடர்ந்தும் மேற்­கொண்டு வரு­கின்றோம். அதேபோல் இந்த விசா­ர­ணை­களின் போதும் நாம் பொது­மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி உண்மை சாட்­சி­யங்­களை சேக­ரித்து வரு­கின்றோம். எனினும் இந்த விவ­கா­ரங்­களில் எவ­ரதும் தனிப்­பட்ட விருப்­ப­திற்கு அமை­யவும் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடி­யாது. அதேபோல் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் விருப்­பத்தை நிறை­வேற்றும் வகை­யிலோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ எம்மால் அனாவசியமாக எதையும் மேற்கொள்ளவும் முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணை பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை நாம் சரியான முறையில் நிறைவேற்றுவோம். அதேபோல் உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையும் இந்த அரசாங்கத்தில் முழுமையடையும் என அவர் தெரிவித்தார்.