சர்வதேச கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தை மீறும் போது அவர்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் வகையில் 1996 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க மீன்பிடி மற்றும் நீர் வளங்கல் சட்டத்தில்  திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 


இதனடிப்படையில் சட்டவாக்க அதிகாரியினால் வரையப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு மீன்பிடி மற்றும் நீர் வளங்கல் அபிவிருத்தி அமைச்சர்  மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.