வென்னப்புவ பிரதேசத்தில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் நிலையத்தில்  5 இலட்சத்து 91 அயிரத்து 750 ரூபா பெறுமதியான பணத்தை திருடிய ஈரானிய பிரஜைகள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தூதரக அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சந்தேக நபர்கள் இருவரும் சட்டத்தரணியொருவருடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள நாணய மாற்று  நிலையம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக நபர்கள்  வெளிநாட்டு நாணயங்களை மாற்ற வேண்டும் எனக் கூறி  பணத்தை திருடிச் சென்றுள்ளனர். 

இதன்படி வர்த்தக நிலையத்தில் இருந்து 1000  டொலர், 850 சவூதி ரியால், 3,000 திர்ஹம் பணத்தினை திருடியுள்ளனர்.

நாணயம் மாற்று நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு சீசிடீவி கெமராவிவினூடாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.