நாட்டின் டுவிட்டர் தடையை மீற முயற்சிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடரப்படும் என்று நைஜீரிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக அந் நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

நைஜீரியாவில் தொலைதொடர்பு இயக்குனர்கள், டுவிட்டருக்கான அணுகலை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்குவதாகக் கூறினர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு மோதலை மேற்கோள் காட்டி ஜனாதிபதி மொஹமட் புஹாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். 

வன்முறையை தூண்டுவதாக கூறி இந்த பதிவை டுவிட்டர் நீக்கியது. 

ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு காலவரம்பற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.