மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் மீது ஒரே இரவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளது.

நைஜருடனான கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள யாகா மாகாணத்தில் உள்ள சோல்ஹான் கிராமத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் ஜிஹாதி தாக்குதல்கள் வெடித்ததில் இருந்து பதிவான மோசமான தாக்குதல் இதுவாகும்.

இந் நிலையில் இத் தாக்குதலை கண்டித்துள்ள புர்க்கினா பாசோ ஜனாதிபதி ரோச் கபோர்,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் மொத்தம் 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதில் ஏழு சிறுவர்களும் அடங்குவர். மேலும் 40 குடியிருப்பாளர்களும் காயமடைந்தனர் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒசேனி தம்பூரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ள நிலையில் எந்தவொரு குழுவும் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

2015 ஆம் ஆண்டு முதல் மேற்கு ஆபிரிக்க புர்க்கினா பாசோ அல்-கொய்தாவுடன் இணைக்கப்பட்ட குழுக்களிடமிருந்து பெருகிய முறையில் அடிக்கடி மற்றும் ஆபத்தான தாக்குதல்களுக்கு எதிராக போராடி வருகிறது.

மேலும் சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்). இந்த தாக்குதல்கள் முதலில் வடக்கில் மாலி எல்லைக்கு அருகே தொடங்கின, ஆனால் பின்னர் பிற பிராந்தியங்களுக்கும், குறிப்பாக கிழக்கில் பரவியுள்ளன. 

இது உலகின் மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகும்.

சஹேல் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு படையினர் மற்றும் பிற சர்வதேச மற்றும் பிராந்திய படைகள் இருந்தபோதிலும், ஆயுதக் குழுக்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளன.

இதனால் புர்க்கினா பாசோவில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் நீண்டகால தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டயாத்தையும் எதிர்நோக்கினர்.