புத்தளம், கருவெலகஸ்வெவ  பகுதியில் இன்று அதிகாலை  காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த  5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலலனின்றி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை புத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் வானொன்றின் மீது காட்டு யானை ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் 11 பேர் காயமடைந்திருந்நதுடன், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் காயமடைந்திருந்த  5 சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.