நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டில் பெய்து வருகின்ற கடும் மழை, மண்சரிவு காரணமாக 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், எதிர்வரும் 6 முதல் 18 மணித்தியாலத்தில் இவ்வாறு களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் இதனால் குறித்த பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.