ஆபிரிக்க நாடான வடக்கு புர்கினா பாசோவிலுள்ள கிராமமொன்றில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜரின் எல்லையில் உள்ள யாகா மாகாணத்தில் உள்ள சோல்ஹான் கிராமத்தில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதலில் ஈடுபட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும் சந்தைத்தொகுதியொன்றையும் எரித்ததாக அந்நாட்டு அரசாங்கம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டு அரசாங்கம் தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று தெரிவித்துள்ள போதிலும் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இதையடுத்து அந்நாட்டு அரசாங்கம் 72 மணிநேர தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் இந்த தாக்குதலை "காட்டுமிராண்டித்தனம்" என தெரிவித்துள்ளார்.

யாகா மாகாணத்தின் முக்கிய நகரமான செபாவிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சோஹ்லான் என்ற சிறிய சமூகம் சமீபத்திய ஆண்டுகளில் ஏராளமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.