(.கிஷாந்தன்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இவ்விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

நோர்வூட் பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும் புளியாவத்தை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

கெப் ரக வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும் கெப் ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.