கேகாலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை; பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published By: Digital Desk 3

05 Jun, 2021 | 06:22 PM
image

கடந்த சில தினங்களாக கேகாலை மாவட்டத்தில் பெய்துவரும் இடியுடன் கூடியதான பலத்த மழையினால் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நேற்று மாலை முதல் பெய்த மழையில் கேகாலை புளத்கோப்பிட்டிய பிரதான வீதி நீரில் மூழ்கியதுடன், கேகாலை ரங்வெல்ல கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து அதன் அண்டிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் குருகொட ஆறு பெருக்கெடுத்ததில் தலோவிட்ட மற்றும் கன்னந்தொட்ட பகுதிகள் நீரில் மூழ்கின, இதில் பல வீடுகள் வெள்ளதால் பாதிக்கப்பட்டு நீர் நிரம்பி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் கேகாலை வீதியினுடனான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

அதேநேரம் நேற்று (4ஆம்) திகதி) அங்குருவெல்ல இம்புலான பகுதியிலும் வீடொன்றின் மீது பாரிய கற்பாறை சரிந்து விழுந்து வீடு சேதமடைந்திருந்த வேளை எட்டியாந்தோட்டை லெவண்ட் தோட்டத்திலும் மண்சரிவும் மற்றும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டதில் தோட்ட மக்கள் அச்சநிலையில் வாழ்வதாக தெரிவித்தனர்.

நேற்று இரவு காற்றுடன் கூடிய அடைமழையால் ருவென்வெல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்பாத்த எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.

70 வயதான ஒரு வயோதிபர் உறங்கும் இடத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. நித்திரையில் இருந்து எழும்பி சில மணிநேரங்களிலேயே இச்சம்பவம் நடந்ததாக வீட்டார் தெரிவித்தனர். அந்த வீட்டில் வசித்து வந்த இரண்டு வயது சிறுகுழந்தையுடன் ஏழுபேரும் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

மற்றும் கேகாலை மாவட்டத்தில் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் அதன் அயல் பிரதேசங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் தெரணியகலை, தெஹியோவிட்ட, புளத்கோப்பிட்டிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24