செரீனா, அசரென்கா நான்காவது சுற்றுக்குத் தகுதி

Published By: Digital Desk 2

05 Jun, 2021 | 03:17 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னனி டென்னிஸ் நட்சத்திரங்களான செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரென்கா முன்னேறினர்.

நேற்றைய தினம் நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது சக நாட்டு வீராங்கனையான டெனில் ரோஸ் கொலின்ஸை எதிர்த்தாடியிருந்தார்.

இப்போட்டியில் 6 க்கு 4 ,6 க்கு 4 என்ற நேரடி செட்டில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேவேளை, அமெரிக்காவின் மெடிசன் கீய்ஸை எதிர்த்தாடிய பெலாரசின் விக்டோரியா அசரென்கா முதலிரண்டு செட்களையும் 6 க்கு 2 , 6 க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக கைப்பற்றி நான்காவது சுற்றில் அடியெடுத்து வைத்தார்.

நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் நான்காவது கஸகஸ்தானின் எலெனா ரிபகினாவை சந்திக்கவுள்ளதுடன், விக்டோரியா அசரென்கா ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லியுசென்கோவா எதிர்கொள்ளவுள்ளார். இப்போட்டிகள் நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10