கொழும்பு  உள்ளிட்ட  சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!: இயற்கை சீற்றத்தால் 4 பேர் பலி

By J.G.Stephan

05 Jun, 2021 | 01:15 PM
image

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதால் கடுவலை, பியகம, கொலன்னாவை, களனி, கொழும்பு ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 6 முதல் 18 மணித்தியாலத்தில் இவ்வாறு களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் இதனால் குறித்த பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே குறித்த பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதால், மேலும் அப்பகுதிகளில் பாதிப்புக்கள் அதிகரிக்கலாமெனவும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகால நிலையையடுத்து, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 7 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 468 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் சீரற்ற காலநிலையால் 82 ஆயிரம் இணைப்புகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right